ஐ.என்.டி.யு சி மாநில செயற்குழு கூட்டம் திருச்சியில் நேற்று நடந்தது.
கூட்டத்திற்கு மாநிலத் தலைவர் வி.ஆர்.ஜெகநாதன் தலைமை தாங்கினார்.
பொதுச் செயலாளர் சீனிவாசன் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் தமிழக அரசு பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் தனியார் துறையில் பணியாற்றி ஈபிஎப் பென்ஷன் பெறுபவர்களுக்கு ரூ1000 முதல் 3500 வரை வழங்குகிறது .
மத்திய அரசு
பணி ஓய்வு பெற்ற வயது முதிர்ந்தவர்களின் ஜீவனாம்சம் மற்றும் மருத்துவ செலவினை ஈடு செய்யும் வகை குறைந்தபட்சம் ரூ 9000 வழங்க வேண்டும். தமிழ்நாடு சிவில் சப்ளை கார்ப்பரேஷன் இயங்கி வருகின்ற நேரடி கொள்முதல் நிலையங்கள் மூலம் கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகளை 48 மணி நேரத்திற்குள் இயக்கம் செய்ய வேண்டும் என்று அரசு உத்தரவு இருக்கின்ற நிலையில், 48 நாட்கள் ஆகியும் இயக்கம் செய்யப்படாமல் இருக்கின்ற காரணத்தால் ஏற்படும் இழப்பிற்கு அந்த தொழிலாளிடம் பணம் பிடித்தம் செய்வதை இச்சங்கம் கண்டிக்கிறது என் பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் மாநில நிர்வாகிகள் கதிர்வேல், பிரபாகரன், சேவியர் , இளவரி, களஞ்சியம் ,ஜீவன் மூர்த்தி , பலராமன் ,புவனேஸ்வரி, துளசிதாஸ் , ஸ்டீபன், முரளிதரன், அருள் பிரசாத் உட்பட மாநில செயற்குழு உறுப்பினர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தை திருச்சி மாவட்ட கவுன்சில் கல்யாண்குமார், வெங்கட் நாராயணன் ஆகியோர் ஒருங்கிணைத்திருந்தனர். முடிவில் பி எச் இ எல் ஐ என் டி யு சி பொதுச்செயலாளர் மதன்குமார் நன்றி கூறினார்.


No comments:
Post a Comment